search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை தேர்வுகள் ரத்து"

    கஜா புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #AnnaUniversity
    கஜா புயல் பாதிப்பு காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

    இந்த புயல் குறித்து எச்சரிக்கை விட்டிருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. 

    புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

    புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    கஜா புயல் எதிரொலி காரணமாக நாளை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #GajaStorm
    சிதம்பரம்:

    இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. - நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கஜா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

    தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ள்ளார்.

    இதேபோல், கஜா புயல் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    ×